திடீர் மாரடைப்பால் சரிந்த டிரைவர்..! கண்டக்டரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள்..!
பிஎம்டிசி பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார் பெங்களூருவை சேர்ந்தவர் ஓப்லெஸ். . இவரது பஸ் டிரைவர் கிரண்குமார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் நெலமங்கலவில் இருந்து தசனபுர டிப்போவிற்கு தமது 256 M/1 வழித்தட பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கிரணுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் தொடர்ந்து ஓட, முன்பிருந்த பேருந்தின் ஓரத்தில் மோதி, சாலையில் தொடர்ந்து ஓடியது. பீதியடைந்த கண்டக்டர் ஓப்லெஸ், உடனடியாக சுதாரித்து, டிரைவரை இருக்கையில் இருந்து நகர்த்தி வாகனத்தை நிறுத்தினார். அந்த வழியாக சென்றவர்கள் டிரைவரை மயங்கி விழுந்ததை பார்த்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததில் கிரண் குமார் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிரண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் கிரண் குமார் பணியின் போது இறந்த அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
In #Bengaluru: When the bus driver suffered a #heart attack…
— TOI Bengaluru (@TOIBengaluru) November 6, 2024
BMTC bus conductor Obalesh jumped on the driver’s seat and took control of the steering when driver Kiran Kumar #DIED of cardiac arrest. The bus (route 256 M/1) was going from Nelamangala to Dasanapura depot. pic.twitter.com/gwsgqN1Xyp