இப்படி கூடவா டிரஸ் போடுவாங்க… வைரலாகும் ஒற்றை கால் ஜீன்ஸ்..!

ஃபேஷன் என்ற பெயரில் செய்து வரும் அட்ராசிட்டி அதிகம். அந்த வகையில் உள்ளாடை தெரியும்படி டிரஸ் போடுவது, மற்றும் கிழிந்த கீழாடைகளை அணிவது போன்றவைகளை மாடல் என கருதுகிறார்கள்.
இந்நிலையில் தற்போது ஒற்றைக்கால் ஜீன்ஸ் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது ஒரு பிரபலமான பிரஞ்சு லக்சரி பிராண்டில் இருந்து ஃபேஷன் என்ற பெயரில் ஒரு “ஒற்றைக் கால் ஜீன்ஸ் ஜீன்ஸ் பேண்ட்” வெளியாகி உள்ளது. இதன் விலை ரூபாய் ரூ.38, 346 ஆகும். இந்த ட்ரெண்டை சிலர் பாராட்டி வந்தாலும் இன்னும் சிலர் இதனை அபத்தமான பேஷன் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து பிரபல இன்ஃப்ளூயன்சரான கிறிஸ்டிசாரா தன்னுடைய டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “இது இணையத்தில் மிக சர்ச்சைக்குரிய ஜீன்ஸ்” என்று அவர் கூறினார். அதோடு அவருடைய கணவர் டெஸ்ட்மென்ட் “இதை யாரும் அணிய போவதில்லை” என்று கண்டித்து கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் சிலர் “முட்டாள்தனம்” என்றும் “ஃபேஷன் வெறிமயமாக உள்ளது” என்றும் விமர்சித்து வருகின்றனர். இன்னும் சிலர் “இது ஓர் அரைகுறை பேஷன், நான் கூட தூங்கும்போது ஒரு காலை பெட்சீட்டுக்கு வெளியே வைத்திருப்பேன், அதேபோல் இருக்கு” என்று கூறினார்.