கனவு பலன்கள் : குங்குமம் கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா ?

குங்குமம் கனவில் வந்தால் என்ன பலன்:
- பொதுவாக குங்குமத்தை கனவில் கண்டால்: வாழ்வில் வளர்ச்சி பெற இருப்பதையும், குடும்பத்தில் யாரேனும் கரு தரிக்க இருப்பதையும், சந்தோசமான தருணம் வர இருப்பதையும், புதிய சூழலுக்கு தகுந்தது போல் வாழ்வில் சில விஷயங்களை மாற்ற இருப்பதையும் குறிக்கிறது.
- சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் உள்ள குங்குமத்தை கனவில் கண்டால்: வாழ்வில் சிறிய இன்ப நிகழ்வுகளை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் கற்பனையாக உங்கள் சொந்த உலகில் வாழ இருப்பதையும், வாழ்வில் வரும் சவால்களை சமாளிக்க இருப்பதையும், நீங்கள் இறக்கத்துடன் பிறருக்காக சில தியாகங்களை செய்ய இருப்பதையும், நல்ல இதயம் கொண்டவராக மாற இருப்பதையும், உங்கள் வாழ்வில் நிலையான முன்னேற்றம் அடைய இருப்பதையும் குறிக்கிறது.
- மாணவர்கள் குங்குமத்தை கனவில் கண்டால்: உங்கள் பாடத்தை பயில யாரவது உங்களை ஊக்கவிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அர்த்தம். ஊக்கத்துடன் பாடத்தை பயிலவும் என்றும் கனவு உணர்த்துகிறது.
- குங்குமத்தை நெற்றியில் இடுவது போல் கனவு கண்டால்: உங்கள் மனதில் ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் ஞானம் வர இருப்பதையும், வாழ்வில் நல்ல அணுகுமுறையை பிறரிடம் வெளிப்படுத்த இருப்பதையும், எதோ ஒரு விஷயத்தை எதிர்கொள்ள பயப்படுவதையும், நல்ல தூய்மையான நட்பு உறவு உங்களுக்கு கிடைக்க இருப்பதையும், வாழ்வில் வரும் மகிழ்ச்சி பொழுதுபோக்கு போன்றவற்றை அனுபவிக்கவும் கனவு உங்களுக்கு உணர்த்துகிறது.
- திருமணம் ஆனவர்கள் குங்குமத்தை கனவில் கண்டால்: உங்கள் குடும்பம் ஒற்றுமையுடன் இருப்பதையும், குடும்பத்தில் அனைவரும் ஒன்று கூடி விழா நடத்த இருப்பதையும், தாராளமான மனப்பான்மையுடனும், மனிதநேயத்துடனும் பிறரிடம் நடந்து கொள்ள இருப்பதையும், புதிய நட்பு உறவுகள் வாழ்வில் இணைய இருப்பதையும் குறிக்கிறது.
- பச்சை நிற குங்குமத்தை கனவில் கண்டால்: நல்ல ஞானம் தெளிவு உங்கள் மனதில் வர இருப்பதையும், வாழ்வில் உள்ள தடைகளை எதிர்த்து இலக்குகளை நோக்கி வாழ்வில் அடி எடுத்து வைக்க இருப்பதையும், விருப்பம் இல்லாத திட்டங்களை விட்டுவிட அறிவுறுத்தியும், எந்த சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை வாழ்வில் அறிந்து செயல்படவும் கனவு உணர்த்துகிறது.
- ஏதோ ஒரு பெண் குங்குமத்தை உங்களிடம் தருவது போல் லனவு கண்டால்: வாழ்வில் உங்களுடைய பொறுப்புகள் என்ன என்பதை அறிந்து அதை சரியாக செயல்படுத்த கனவு உணர்த்துகிறது.
- நெற்றி வகுடில் குங்குமத்தை இடுவது போல் கனவு கண்டால்: நீங்கள் கடந்த காலத்தில் நடந்த செயல்களையே எண்ணிக்கொண்டு தன் சொந்த வாழ்வில் நடக்க இருக்கும் விஷயங்களை விட்டுவிடுகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. நீங்கள் ஆன்மீக பாதையிலும், மிகுந்த விழிப்புணர்வுடனும் வாழ்வில் பயணிக்க கனவு உணர்த்துகிறது.
- குங்குமம் தரையில் சிந்துவது போல் கனவு கண்டால்: நீங்கள் மனக்கொந்தளிப்புடன் இருப்பதையும், நீங்கள் ஓய்வில்லாமல் கடினமாக உழைப்பதனால் சிறிது ஓய்வு எடுக்கவும், பிறரிடம் பேசும் பொழுது கடினமான சொல்லை தவிர்க்கவும், உங்கள் பொறுப்புகளை விட்டுவிட இருப்பதையும், நீங்கள் ஏதோ ஒரு சூழ்நிலையை சமாளிக்க இருப்பதையும் குறிக்கிறது.
- உங்கள் கணவர் குங்குமத்தை நெற்றியில் இடுவது போல் கனவு கண்டால்: நீங்கள் உங்கள் லட்சியத்திற்காக விடாமுயற்சி செய்து போராடுவதையும், உங்கள் வாழ்க்கை புதிய திசையில் மாற இருப்பதையும், ஆனால் நீங்கள் நம்பிக்கை இல்லாதது போல் உணர்வதையும் குறிக்கிறது.
- திருமணம் ஆகாத இளம்பெண்ணின் நெற்றியில் யாரோ ஒருவர் குங்குமத்தை இடுவது போல் கனவு கண்டால்: கனவு காணும் இளம்பெண் தான் அறிந்த ஒருவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதை பற்றி குறிக்கிறது.
- வெற்றிலை தாம்பளத்துடன் மஞ்சள் மற்றும் குங்குமத்தை கனவில் கண்டால்: யாரோ ஒருவரை நீங்கள் சந்திக்க போகிறீர்கள் என்பதையும், நல்ல செய்தி வர இருப்பதையும் குறிக்கிறது.