1. Home
  2. தமிழ்நாடு

நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்த டிராவிட்..!

Qq

இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதிவில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டிராவிட், ஐ.பி.எல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிர் வரும் சீசனில் பயிற்சி அளிக்க இருக்கிறார். 
இந்நிலையில், ராகுல் டிராவிட் பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் சண்டை போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ராகுல் டிராவிட் தனது காரில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட கன்னிகாம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த சரக்கு ஆட்டோ, டிராவிட் கார் மீது மோதியுள்ளது. இதில் காரின் முன் பகுதி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த டிராவிட் கீழே இறங்கி வந்து, ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 
இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதியில் மக்கள் அந்த இடத்தில் கூட்டம் கூடினர். இதையடுத்து டிராவிட், ஆட்டோ டிரைவரிடம் செல்போன் எண் மற்றும் வீட்டு முகவரி தொடர்பான விவரங்களை பெற்று கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து எந்த புகாரும் அவர் போலீசில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 


 

Trending News

Latest News

You May Like