கோவையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டதன் பேரில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ண்பங்கள் பெறப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (27.10.2023) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரால் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தற்போது 27.10.2023-ஆம் தேதியில் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 14,96,770 ஆண்கள், 15,51,665 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 569 ஆக மொத்தம் 30,49,004 வாக்காளர்கள் உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு சுருக்கத் திருத்தப்பணிகள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024-யினை முன்னிட்டு எதிர்வரும் 04.11.2023 (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 18.11.2023 (சனிக்கிழமை), 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
எனவே, 01.01.2024-ஆம் தேதியில் 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் புதியதாக பெயர் சேர்க்க, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய மற்றும் பெயர்கள் நீக்கம் செய்ய வேண்டுபவர்கள் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க படிவம் 6-யையும், பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-யையும், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள் புதிய குடியிருப்பு முகவரி மாற்றம் செய்ய படிவம் 8-யையும்/ www.vsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய 09.12.2023 வரை மனுக்கள் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.