1. Home
  2. தமிழ்நாடு

அண்ணாமலையின் நடைபயண விழாவில் பங்கேற்கும் டாக்டர் கிருஷ்ணசாமி.!

1

ஊழலுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் 'என் மண் , என் மக்கள்' நடைபயண தொடக்க நிகழ்வு ஜூலை 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.

இந்த தொடக்க விழாவில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 23-ம் தேதி தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்தார். 

அந்த கடிதத்தை, கோவை மாவட்ட பாஜக தலைவர் மற்றும் நிர்வாகிகள் டாக்டர் கிருஷ்ணசாமியின் கோவை இல்லத்தில் நேரடியாக சந்தித்து வழங்கினர். பாஜக அழைப்பை ஏற்று, ராமேஸ்வரத்தில் நடைபெறும் நடைபயண தொடக்க விழாவில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொள்கிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like