நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர்... நடிகர் கமல்ஹாசன் புகழ் அஞ்சலி..!
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுநாள் இன்று (ஆக.7) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தரப்பினர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், நடிகரும் எம்.பி யான கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தன் வாழ்நாள் முழுக்க தமிழையும், தமிழர் நலனையும் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த முத்தமிழறிஞர், நவீனத் தமிழகத்தின் சிற்பி, கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று.
சமத்துவத்தின், சமூகநீதியின் அடையாளமாகவும், அரசியல் மாண்பிற்கு ஆகச்சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்ந்த ஆசானின் நினைவுகளைப் போற்றுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தன் வாழ்நாள் முழுக்க தமிழையும், தமிழர் நலனையும் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த முத்தமிழறிஞர், நவீனத் தமிழகத்தின் சிற்பி, கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று.
— Kamal Haasan (@ikamalhaasan) August 7, 2025
சமத்துவத்தின், சமூகநீதியின் அடையாளமாகவும், அரசியல் மாண்பிற்கு ஆகச்சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்ந்த ஆசானின் நினைவுகளைப்…
.png)