பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்..!
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. மொத்தம் 93.80 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவிகள் 4,17,183 (95.88 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 4,00,078 (91.74 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
இந்தநிலையில், கோவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் (474) பெற்று இரட்டையர் கவிதா, கனிஹா அசத்தி உள்ளனர். அவர்களுக்கு உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.