1. Home
  2. தமிழ்நாடு

இந்த மாதம் பெண்களுக்கு டபுள் ஜாக்பாட் - 1000 + 1000 = 2000

1

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளின் போது முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.ஏற்கெனவே 1 கோடியே 6 லட்சத்திற்கும் மேலானோருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு மனுக்கள் வரபெற்றது .அவற்றையும் தமிழக அரசு பரிசீலனை செய்து திட்டத்தை செயல்படுத்த கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் முதல்கட்டமாக 1.06 கோடி பேருக்கும் இரண்டாவது கட்டமாக 7.35 லட்சம் பேருக்கும் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 3ஆவது கட்டமாக தகுதியானவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும். இந்த நிலையில் இந்த மாதமே தகுதியான நபர்களுக்கு ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படு்ம என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 கோடியே 15 லட்சம் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ₹1000 தொகை, பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் 10ம் தேதியே வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 மேலும் பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். 

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பரிசு தொகுப்போடு சேர்த்து ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடமும் ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், இந்த வருடமும் வழங்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like