மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!
* மழைக்காலம் தொடங்கும் முன்பு, அல்லது வெயில் சற்று அதிகம் இருக்கும் நாள்களில் கால் மிதியடிகள், திரைச்சீலைகள், தலையணை உறைகள், கனமான போர்வைகள் போன்றவற்றை துவைத்து எடுத்து வைத்துக்கொள்ளலாம். மழைபிடிக்கத் தொடங்கிவிட்டால் இவற்றையெல்லாம் துவைப்பதும், உலர்த்துவதும் கடினம். ஈரம் காயாமல் பூஞ்சைத் தொற்று ஏற்படலாம்.
*மழைக்காலத்தில் குடிநீர் மூலம் நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால் குடிநீரை காய்ச்சி ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
*காய்கறி பயறு வகைகளை அதிக அளவில் உணர்வில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
*சமைத்த உடன் சூடாக உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆறிப்போன உணவுகளால் சளி தொல்லை போன்ற பிற பிரச்சனைகள் ஏற்படலாம்.
*மழைக்காலங்களில் குளிர் அதிகம் இருக்கும் என்பதால் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளும் வகையில் சூப், ரசம், டீ, காபி உள்ளிட்டவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது.
* அத்தியாவசிய மளிகைப் பொருள்களான அரிசி, பருப்பு, மாவு வகைகள் போன்றவற்றை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ளலாம். டெட்டால், தைலம், பாராசிட்டமால், கொசுவத்தி சுருள் மற்றும் சில அடிப்படையான பொருள்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம். சாதாரண காய்ச்சல், சளி, இருமல் தொல்லைகளை அவசரத்துக்கு சமாளிக்க உதவும்.
* மழைநாள்களில் அடிக்கடி மின்தடை ஏற்படலாம். எனவே, பேட்டரி செல், மெழுகுவத்தி கைவசம் இருப்பது முக்கியம். எமர்ஜென்சி விளக்குகளை எடுத்து, தேவைப்பட்டால் ரிப்பேர் செய்தோ, புதிது வாங்கியோ தயாராக வைத்துக்கொள்ளலாம்.
* குடை, ரெயின் கோட்களை பரண் மேல் இருந்து எடுத்து, சுத்தம் செய்து, தேவைப்பட்டால் பழுது பார்த்து வைத்துக்கொள்ளலாம். வீட்டில் எத்தனை பேரோ அதற்கு இணையான எண்ணிக்கையில் இவற்றை வைத்துக்கொள்வது நலம். இல்லையென்றால், இருவர் குடை/ரெயின் கோட்டை எடுத்துச் சென்றுவிட்டார் எனில் அவர் வரும்வரை மற்றவர் காத்திருக்க வேண்டும்.
*மழைக்காலங்களில் திடீர் இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பாரஸ்ட்டமல் போன்ற அத்தியாவசிய மருந்து பொருட்களை மருத்துவர் ஆலோசனையின் பேரில் தயாராக வைத்துக் கொள்ளலாம்.
*காலங்களில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மின் விளக்குகள் மற்றும் மின்சாதன பொருட்களை கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
*வீட்டை சுற்றிலும் மழைநீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்வது அவசியம். குழந்தைகளை மிக கவனமுடன் பெற்றோர் கண்காணிக்க வேண்டியதும் மிக முக்கியம்.
*மழைக்காலங்களில் நீர் தேங்கி இருப்பதால் சாலைகளில் பள்ளம் இருப்பது தெரியாது எனவே வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
*சாலையோரம் இருக்கும் மின்சாதன பொருட்களையோ மின் கம்பிகளையும் தொடக்கூடாது.
* மழைக்காலங்களில் கூடுமானவரை வீட்டையும், கழிவறைகளையும் ஈரமில்லாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகம் ஈரப்பதமான இடங்களில் பூச்சிகள், பூரான்கள் வரும் வாய்ப்புகள் உண்டாகும்.
* பார்க்கிங் ஏரியா போல வீட்டுக்கு வெளியிலோ, மொட்டை மாடியிலோ, திறந்த வெளியிலோ தேவையற்ற பொருள்களை போட்டு வைப்பதைத் தவிருங்கள். அதில் தண்ணீர் தேங்கி கொசுக்கள், புழுக்கள் போன்றவை முட்டையிட்டு, பெருகி, நோயையும் பெருக்கும் அபாயமுண்டு. மாலை நேரங்களில் வேப்பிலை புகைபோட்டு கொசு மற்றும் பூச்சிகள் வராமல் தவிர்க்கலாம்.
* மழை நேரங்களில் குடிநீரை காய்ச்சி வடிகட்டி அருந்துவது நல்லது. கூடுமானவரை சூடான நீரைப் பருகுவது மிகவும் பாதுகாப்பானது. அதேபோல், சமைத்த உணவுகளை சுடச்சுட உண்பது ஆரோக்கியத்துக்கும் நாக்கின் சுவை மொட்டுகளுக்கும் நல்லது. செரிமானத்துக்கு சற்றுக் கடினமான கீரை மற்றும் அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். சூடான கஞ்சி, காய்கறி சூப் போன்றவற்றை அதிகம் பருகலாம்.
* மழைக்காலம் தொடங்கும் முன்பே வீட்டில் இருக்கும் மின்சாதனங்களை பழுதுபார்த்து பராமரித்துக்கொள்வது அவசியம். மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்படும் அபாயம் உண்டு என்பதால், எலெக்ட்ரிகல் சாதனங்களைக் கையாளும் போதும் கவனம் தேவை. கண்டிப்பாக ஈரக்கையால் இயக்கக் கூடாது.
* மழைநாள்களில் வீட்டில் `ஹோம் செப்பல்’ அணிந்துகொள்ளலாம். இதனால் தரையின் ஈரப்பதம் பாதங்களில் ஏறாமல் இருக்கும்; சேற்றுப்புண், பித்தவெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கும். மின்சாதனங்களைப் பயன்படுத்தும்போது ஷாக் அடிக்காமலும் தடுக்கும்.
* மழைநாள்களில் வெளியில் செல்லும்போது கவனமாகப் பயணிக்கவும். சாலையின் ஓரத்தில் செல்லாமல் நடுவில் செல்வது பாதுகாப்பானது. அது, சாலையோர பள்ளங்கள், அறுந்து விழுந்த மின்கம்பிகள், திறந்து கிடக்கும் மேன்ஹோல்களிடம் இருந்து காக்கும்.
* வெளியில் சென்று வந்தவுடன் சூடான நீரில் குளித்து உடைமாற்றுவது மழைக்கால நோய்களிலிருந்து காக்கும்.
* தொலை தூர பயணங்களை, வானிலை அறிவிப்பு, மழை பெய்ய வாய்ப்பு உள்ளிட்டவற்றைப் பரிசீலித்து முடிவெடுக்கவும்.
செய்யக் கூடாதவை
மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும். மின்சார கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் அது தொடர்பாக அருகில் இருக்கும் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி,மின்னல் ஏற்படும்போது டிவி, கணினி, செல்போன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. மழையின் போது வீட்டுச் சுவரில் தண்ணீர் கசிவு ஏற்படாமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டதால் மின்கம்பிகளுக்கு அருகிலுள்ள மரங்களுக்கு கீழ் நிற்க கூடாது. மழை பெய்து வரும் போது தயிர், வெண்ணெய், நெய் போன்ற குளிர்ச்சியான பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். பழச்சாறுகளில் கிருமி தொற்று இருக்க வாய்ப்பு இருப்பதால் அவற்றையும் தவிர்ப்பது நல்லது.
குளிர்காலங்களில் சளித்தொல்லை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தயிர் வெண்ணை ஜூஸ் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவு குளிர்சாதன பெட்டியில் வைத்த குடிநீர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது