1. Home
  2. தமிழ்நாடு

நகை திருடுபோனால் கவலைப்படாதீங்க...! தங்க நகைகளுக்கு வந்தாச்சு இன்சூரன்ஸ்!

1

வீடு, கார் போன்றவற்றுக்குக் காப்பீடு திட்டங்கள் பொதுவாகவே உள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். தங்கத்தினை பாதுகாக்கவும் காப்பீடு திட்டங்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா?

தங்கம் காப்பீடு திட்டங்கள் உங்கள் தங்கத்தின் மீதான பாதுகாப்பிற்கு உறுதி அளிக்கும். உங்கள் வீடு அல்லது வங்கி லாக்கரில் வைக்கும் போது ஏற்படும் இழப்பிற்கு இந்தக் காப்பீடு திட்டங்கள் உதவும்.

தங்கத்தின் மீது தனியாக அல்லது வீட்டின் மீது எடுக்கும் பாலிசி திட்டங்கள் என இரண்டு முறையில் காப்பீடு பாலிசிகளை தேர்வு செய்யலாம். காப்பீட்டு நிறுவனங்கள் விபத்து இழப்பு, கொள்ளை, திருட்டு, சேதம் அல்லது வங்கி லாக்கரில் வைக்கப்பட்ட நகைகளின் இழப்பு ஆகியவற்றிற்கு எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறது.

நகைகளில் நீங்கள் அணிந்து இருக்கும் போது கொள்ளை அடிக்கப்பட்டால் அதற்குக் காப்பீடு தொகையினை வழங்குகின்றன. இதற்குக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு எப்ஐஆர் நகலினை சமர்ப்பிக்க வேண்டும்.

போர், கலவரம், தீவிரவாத செயல்களினால் ஏதேனும் பாதிப்புகள் நிகழும் போது காப்பீடு அளிக்கப்பட மாட்டாது. உரிமையாளர் அல்லது குடும்ப உறுப்பினர் அல்லது பணிப்பெண் / பராமரிப்பாளர்களால் ஏற்படும் சேதங்களுக்கு காப்பீடு தொகை வழங்கப்படமாட்டாது.சில காப்பீட்டு நிறுவனங்கள் தங்கம் திருட்டுப் போகும் போது அல்லது சேதம் அடைந்த போது காப்பீடு தொகைக்கான கோரிக்கையினை வைக்கும் போது ரசீதுகளை கேட்கும், எனவே ரசீதுகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நகை கொள்ளை போனாலோ அல்லது காப்பீடு செய்யப்பட்ட நபரின் வீட்டிலிருந்து திருடு போனாலோ, போக்குவரத்து சமயங்களில் காணாமல் போனாலோ, இயற்கை பேரழிவுகளில் இழந்துவிட்டாலோ காப்பீடு வழங்கப்படும். வெள்ளம் உள்ளிட்ட 13 பேரழிவுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் காப்பீடு கிடைக்கும். 

மேலும் வீட்டில் திருட்டு நடந்து 30 நாட்களுக்குப் பிறகு காப்பீடு தொகையினை பெற முயலும் போதும் காப்பீட்டு நிறுவனங்கள் தீர்வு பணத்தினை அளிக்காது.

Trending News

Latest News

You May Like