1. Home
  2. தமிழ்நாடு

பகல் நேரத்தில் வேலை வேண்டாம்.. பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!

Q

ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் இருந்தே வெப்பநிலையானது 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகி வருகிறது.
இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், இதற்காக அதிக தண்ணீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள ஆகாரங்களை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், தண்ணீர் பாட்டில் மற்றும் குடை ஆகியவற்றை எங்கு சென்றாலும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில், தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வந்தாலும், பல்வேறு இடங்களில் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே, கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் உட்பட நேரடியாக வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நேரடியாக வெயிலில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டலாம். இதனை நாம் உதாசீனப்படுத்தினால், உடலின் பாகங்களின் செயல் குறைந்து, நம்மால் சரிவர இயங்க முடியாத நிலை ஏற்படும்.
எனவே, விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஆகியோர் வெயில் நேரத்தில் பணிபுரிவதை தவிர்க்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, இது தொடர்பாக தொழில்துறை நிறுவனங்களுக்கு அதிகாலை முதல் காலை வரையிலும், பின்னர் மாலை முதல் இரவு வரையில் மட்டுமே பணியமர்த்த பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், நேரடியாக வெயிலில் வேலை செய்யும் பணியாளர்களுக்குத் தேவையான தண்ணீர், ஓ.ஆர்.எஸ் கரைசல் போன்றவற்றை அருகே வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like