1. Home
  2. தமிழ்நாடு

எங்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லையா ? ரயில்வே ஊழியர்கள் கடும் எதிர்ப்பு..!

1

இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவு நடைபெற வேண்டுமென பல்வேறு ஏற்பாடுகளையும் செய்துவருகிறது. ஆனால், இது முழுமையாக நடைமுறைக்கு வருவதில் பல சிக்கல்கள் இருந்துவருகின்றன.

தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின்போதும் 100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற வேண்டுமென்று பிரசாரம் செய்கிறது. ஆனால், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது ஓடும் ரயிலில் பணியாற்றும் லோகோ பைலட்டுகள், கார்டுகள், டிக்கெட் பரிசோதகர்கள், இன்னும் பல தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாத நிலை இருந்துவருகிறது.ரயில் சேவை என்பது அத்தியாவசியப் பணி என்பதால், வாக்களிக்க ஆர்வப்படும் ஓடும் ரயில்வே தொழிலாளர்களுக்கு விடுமுறை எடுக்க முடியாத சூழல். அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான ஒடும் தொழிலாளர்கள் விடுப்பு எடுத்தால், ரயில்வே நிர்வாகத்துக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.

இது போன்று மாநில அரசில் தேர்தலன்று பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மின்வாரிய ஊழியர்கள் போன்றவர்கள் வாக்களிக்க இயலாது. இந்தநிலை நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது. 

இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக தபால் வாக்குப் பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்து. கடந்த 2021 முதல் ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்கும் இந்த வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் 2024 மக்களவைத் தேர்தலையொட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம், கேரளவிலுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமையும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு தமிழக, கேரள ரயில்வே ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like