1. Home
  2. தமிழ்நாடு

தலைவர் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்தக் கூடாது - பொதுச்செயலாளர் என்.ஆனந்த்..!

1

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கி தனது அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணிகளை விஜய்யின் உத்தரவின் பேரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தீவிரமாக செய்து வருகிறார். இதனிடையே த.வெ.க. நிகழ்ச்சிகளிலும், பேனர்களிலும் கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆகியோரின் புகைப்படங்களை த.வெ.க.வினர் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் த.வெ.க. நிகழ்ச்சிகளில் தலைவர் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கட்சியினருக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், த.வெ.க. நிகழ்ச்சிகளிலோ, விளம்பர பேனர்களிலோ, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்சி தலைவர் விஜய் புகைப்படம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்னுடைய படத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டு த.வெ.க. தலைவர் விஜய் படத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Trending News

Latest News

You May Like