இனி டோல்கேட்டில் நிற்க வேண்டாம்; வந்தாச்சு புதிய 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ'..!
'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' முறை என்பது, தடைகள் இல்லாத ஒரு சுங்கச்சாவடி முறையாகும். இதில், வாகனங்கள் சுங்கச்சாவடியில் நிற்காமல் செல்லும்போதே, அவற்றில் உள்ள ஃபாஸ்டேக் (FASTag) மற்றும் வாகனப் பதிவு எண் (VRN) ஆகியவை உயர் செயல்திறன் கொண்ட ஆர்.எஃப்.ஐ.டி (RFID) ரீடர்கள் மற்றும் (ஏ.என்.பி.ஆர்) ANPR கேமராக்கள் மூலம் படிக்கப்பட்டு, கட்டணம் தானாகவே வசூலிக்கப்படும்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 2025-26 நிதியாண்டில் 25 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இந்த MLFF அடிப்படையிலான சுங்க வசூலை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முறையை செயல்படுத்த பொருத்தமான சுங்கச்சாவடிகளை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருவதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் உள்ள சௌராசி கட்டண மையம், நாட்டின் முதல் தடை இல்லாத சுங்கச்சாவடியாக மாற உள்ளது. இதற்காக, இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் (IHMCL) மற்றும் ஐசிஐசிஐ வங்கி இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது இந்தியாவின் முதல் முழுமையான 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' சுங்கச்சாவடி முறையாக செயல்படும்.
.png)