1. Home
  2. தமிழ்நாடு

இன்று ‘ஹாப்பி குட் ப்ரைடே’ன்னு மெஸேஜ் அனுப்பிடாதீங்க..!

1

பொதுவாகவே கிறிஸ்துவர்கள் அனைவருமே சந்தித்து இருக்க கூடிய ஒரு பொது பிரச்சனை என்ன தெரியுமா ?  எப்படி தீபாவளிக்கும், ரமலானுக்கும் தங்களது இந்து, இஸ்லாமிய நண்பர்களுக்கு  அவர்கள் தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனரோ அதைப் போலவே புனித வெள்ளிக்கு பிற மதத்தை சார்ந்த நண்பர்கள் அனைவரும் வாழ்த்து சொல்லுவார்கள். இதில் என்ன பிரச்சனைனு கேக்குறீங்களா? 

இந்த 'பெரிய வெள்ளி' அவர்களுக்கு துக்கம் அனுசரிக்க பட வேண்டிய நாள்.  இது தெரியாமல் தான் நம்மில் நிறைய பேர் இந்த வாட்ஸ் அப் யுகத்தில் அர்த்த ராத்திரியிலேயே 'happy good friday' னு மெஸேஜ் தட்டி வாழ்த்துச் சொல்லத் துவங்குகிறோம். அப்போ ஏன் good friday னு சொல்லுறீங்க bad friday னு சொல்ல வேண்டியது தானேன்னு உங்க mind voice நினைக்கிறது எனக்கு கேட்குது அதை தெரிஞ்சிக்க தொடர்ந்து படியுங்கள்.. 

இறைமகன் இயேசு கிறிஸ்து மானுட பிறவி எடுத்து மனிதர்களின் பாவங்களைப் போக்க தன்னையே பலியாக தந்தார். அவர் மரித்த நாளே 'புனித வெள்ளியாக' அனுசரிக்கப்படுகிறது. தமக்காக ரத்தம் சிந்திய இயேசுவின் தியாகத்தை கருதி அதனை மக்கள் ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து துக்கம் கொண்டாடுகின்றனர். பெரிய வெள்ளி வழிபாட்டு நிகழ்ச்சிகள் ஏறக்குறைய நண்பகல் 3 மணியளவில் தொடங்கும். அதுவே இயேசு சிலுவையில் இறந்த நேரம் என்பதால் இவ்வாறு நடக்கிறது. குரு சிவப்பு உடை அணிந்திருப்பார். அவர் திருப்பணியாளர்களோடு கோவில் பீடத்திற்கு வந்து முகங்குப்புற விழுந்து அமைதியாக இறைவேண்டல் செய்வார். பின் விவிலியத்தின் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய பகுதிகளிலிருந்து வாசகப் பகுதிகள் அறிக்கையிடப்படும். இதனை தொடர்ந்து சிலுவை பாதை நடைபெறும். இயேசு இறந்த 3ம் நாள் மீண்டும் உயிர்தெழுந்தார் என்பர் அதுவே ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

Trending News

Latest News

You May Like