இனிமே ஹார்ட் எமோஜி அனுப்பாதீங்க… அனுப்பினா ஜெயில் தான்..!

சவுதி அரேபியாவில் நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்காக அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, வாட்ஸ் அப் மூலமாக சாட்டிங் செய்யும் ஒரு நபர், தன்னுடன் சாட் செய்யும் நபரின் அனுமதி இல்லாமல், பாலுணர்வை தூண்டும் வகையில் மெசேஜ் செய்தால் அந்த நபருக்கு தண்டனை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தான் இனையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த அறிவிப்பு என்ன என்றால், வாட்ஸ்ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் பெண்களுக்கு “HEART EMOJI”களை அனுப்பினால் சிறைத் தண்டனை அளிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் அபராதமும் விதிக்கப்படும். அதிலும், முதல் முறை தவறு செய்தால் 2 ஆண்டு சிறை மற்றும் அபராதம் உண்டு. மீண்டும் தவறு செய்பவர்களுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் கூடுதல் அபராதமும் விதிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.