இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..! புதிய ரேஷன் கார்டு அட்டை விண்ணப்பிக்க நல்ல வாய்ப்பு!
செப்டம்பர் மாதத்துக்கான ரேஷன் கார்டு குறைதீர்வு முகாம்கள் வரும் 13 ஆம் தேதி சனிக்கிழமை சென்னை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கிறது.
அதாவது, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவை குறித்து இந்த குறைதீர்வு முகாம்களில் மனு கொடுக்கலாம். மேலும், உங்கள் ரேஷன் கார்டு வகையை மாற்றவும் இந்த முகாம்களில் மனு கொடுக்க முடியும். அதாவது, முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு (NPHH) வகையில் இருந்து முன்னுரிமை ரேஷன் கார்டு (PHH)-க்கு மாற்றக்கோரி மனு கொடுக்கலாம். சர்க்கரை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் முன்னுரிமை ரேஷன் கார்டு அல்லது முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்க முடியும். அதாவது, அரிசி ரேஷன் கார்டுக்கு மாற்றிக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பொதுவிநியோக திட்ட குறைதீர்வு முகாம்களில் மனு கொடுத்தால் அதிகாரிகள் ஆய்வு செய்து உங்களின் கார்டு வகையை மாற்ற ஒப்புதல் கொடுப்பார்கள்.
ஒருவேளை புதிய ரேஷன் கார்டு வேண்டும், ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாது என்ற நிலையில் இருப்பவர்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு புதிய ரேஷன் கார்டு கேட்டு மனு கொடுக்கலாம். ரேஷன் கார்டு குறைதீர்வு முகாம்களில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் புதிய ரேஷன் கார்டு சீக்கிரம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் ரேஷன் கார்டு தொலைந்துவிட்டது, சேதமடைந்துவிட்டது என்றால் நகல் ரேஷன் கார்டு கேட்டும் மனு கொடுக்கலாம். பொதுவாக நகல் மின்னணு அட்டை உங்களின் வசிப்பிட முகவரிக்கே அஞ்சல் துறை வழியாக அனுப்பி வைக்கப்படும். அதனால், நகல் மின்னணு அட்டை வேண்டும் என்பவர்கள் இந்த முகாம்களில் மனு அளித்துவிட்டு வந்தால் போதும். ஆன்லைனில் விண்ணப்ப நிலையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதுதவிர, பொருள் விநியோத்தில் உள்ள புகார்கள், ரேஷன் கடை மாற்றம் தொடர்பாகவும் இந்த முகாம்களில் மனு அளிக்கலாம். உங்களின் கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்படக்கூடியது என்றால் சில நிமிடங்களில் கூட துறைரீதியான ஒப்புதல் கிடைத்துவிடும். சென்னை, திருப்பத்தூர் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டத்தினரும் தங்கள் பகுதியில் எந்த தேதியில் பொதுவிநியோக திட்ட குறைதீர்வு முகாம்கள் நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு அந்த நாளில் மேலே சொல்லப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு மனு கொடுத்து பயனடையவும்.