லியோ படத்தின் முதல் 10 நிமிட காட்சிகளை தவற விட்டு விடாதீர்கள்..! லோகேஷ் கனகராஜ் வைத்த வேண்டுகோள்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள படம் லியோ. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகியுள்ள இந்த படத்திற்கான ப்ரீ புக்கிங் புயல் வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ப்ரீ புக்கிங்கில் லியோ படம் பல வசூல் சாதனைகளை முறியடித்து வருகிறது.
இதற்கிடையில் லியோ ப்ரோமோஷனாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பலருக்கும் இன்டர்வியூ அளித்து வருகிறார். அந்த இன்டர்வியூகளில் லோகேஷ் கூறும் பல தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதன்படி சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்த ஒரு பேட்டியில், ”லியோ படத்தின் முதல் 10 நிமிட காட்சிகளை தவற விட்டு விடாதீர்கள்... எப்படியாவது அடித்துப் பிடித்து தியேட்டருக்குள் போய் முதல் 10 நிமிடங்களை பார்த்து விடுங்கள். இந்த 10 நிமிடங்களுக்காக ஓராண்டாக பல பேர் உழைத்திருக்கிறோம். நிச்சயம் அந்த 10 நிமிடங்கள் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும்” என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறி இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் கூறியதை வைத்து பார்க்கும் போது முதல் 10 நிமிடங்களிலேயே ஹைனா உடன் விஜய் சண்டையிடும் காட்சிகள் வர வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.