1. Home
  2. தமிழ்நாடு

மிஸ் பண்ணிடாதீங்க..! இன்று தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்பதிவு துவங்குகிறது..!

1

 தீபாவளி வரும் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வெளியூர், பிற மாநிலங்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதும். எனவே இதனை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளுக்கு ஏதுவாக சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அந்த சிறப்பு ரயிலுக்கான நேரம், இடம் தொடர்பான விவர பட்டியலையும் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு அக்.29, நவ.2-ம் தேதிகளில் அதிவிரைவு ரயில் இயக்கப்படும். கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அக்.31, நவ.4-ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். மங்களூருவில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்.29-ம் தேதி அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து மங்களூருவுக்கு அக்.30-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like