1. Home
  2. தமிழ்நாடு

வெயிலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம்: சுகாதாரத் துறை!

Q

தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:-
தமிழகத்தில் பல மாவட்டங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. அந்த தட்பவெப்ப நிலையில் நேரடியாக பணியாற்றும்போது உடலில் உடனடியாக நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். அதை அலட்சியப்படுத்தினால் ஒரு கட்டத்தில் உடல் உறுப்புகளின் இயக்கம் தடைபடும். அத்தகைய நிலை ஏற்படும்போது மருத்துவ சிகிச்சைகள் விரைந்து கிடைக்காவிடில் உயிரிழப்பு நேரிடலாம்.
எனவே, கட்டுமானப் பணியாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், வியாபாரிகள் என நேரடி வெயிலில் பணியாற்றக் கூடியவர்கள் அனைவரது பணி நேரத்தை மாற்றியமைக்க தொழில் நிறுவனங்களும், உரிமையாளர்களும் முன்வர வேண்டும். அதிகாலையிலிருந்து காலை வரையிலும், அதன்பின்னர் மாலையிலிருந்து இரவு வரையிலும் பணியாற்றலாம். நீர்ச்சத்து இழப்பு ஏற்படாத வகையில் ஓஆர்எஸ் கரைசல், குடிநீர் வசதிகளை ஊழியர்களுக்கு செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

Trending News

Latest News

You May Like