1. Home
  2. தமிழ்நாடு

அந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க..! கையெடுத்து கும்பிட்ட நிக்கி கல்ராணி..!

1

வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளின் பராமரிப்பிற்காக 3 லட்சம் ரூபாய் நிதி உதவி அப்சரா ரெட்டியின் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. இதில் நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"நாம் வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது போல், உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை தத்தெடுத்து, அவற்றின் பராமரிப்பு செலவுகளுக்கு நம்மால் முடிந்த தொகையை வழங்கலாம். எனக்கு சிறுவயதில் இருந்தே விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். நாய்கள், பூனைகள் மட்டுமின்றி, அனைத்து விலங்குகள் மீதும் நாம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் ஒரு விலங்கை தத்தெடுப்பதற்கு பணம் செலுத்தலாம் அது பூனையாக இருக்கலாம், புலியாக இருக்கலாம் அல்லது யானையாக கூட இருக்கலாம். இதுமட்டும் அல்லாது, விலங்குகளுக்கு உணவு மட்டுமின்றி மருத்துவ செலவும் தேவைப்படுகிறது. நாம் அதை தத்தெடுப்பதன் மூலம் அதற்கான முழுமையான மருத்துவ செலவு மற்றும் உணவு கிடைக்கும்.

எனக்கு மிருகங்களை மிகவும் பிடிக்கும் எங்கள் வீட்டில் மூன்று நாய்கள் உள்ளது. நமக்கு பிடித்த விலங்குகளை நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம். நான் நாய்களை காசு கொடுத்து வாங்கவில்லை எனக்கு பரிசாக வந்ததை நான் வளர்த்து கொண்டிருக்கிறேன்.

சாலைகளில் மாடுகளை விடுவது ரொம்ப கஷ்டமான விஷயம். அதுவும் ஒரு உயிர்தான் சாலையில் மாடுகளை விடாதீர்கள். நாங்கள் அதை ஒரு கடவுள் போல் பார்க்கிறோம். அது போல் சாலையில் மாடுகளை விடுகிறீர்கள் என்றால், ப்ளீஸ் அந்தமாரி பண்ணாதீங்க" என்று கையெடுத்து கும்பிட்டபடி கேட்டுக் கொண்டார்.

Trending News

Latest News

You May Like