மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - மாநகராட்சி ஆணையர்..!
மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சென்னையில் மழை நீடிக்கும் நிலையில் களப்பணியாளர்கள் நிவாரணப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
மாநகராட்சி களப்பணியாளர்கள் இரவு வீடு திரும்பாமல் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது . நிவாரணப்பணிகளை மேற்கொள்ள 23 ஆயிரம் பேர் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் தேங்கும் மழைநீரை வடிய வைப்பதற்காக 850 மோட்டர்கள் தயார் நிலையில் உள்ளது என கூறினார்.
சென்னை புறநகர் பகுதிகளில் நாளை காலை 8 மணி வரை மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது