1. Home
  2. தமிழ்நாடு

யாரும் ஏமாந்துடாதீங்க...என்னுடைய பெயரில் மோசடி நடக்குது : சாக்‌ஷி அகர்வால்..!

11

இன்ஸ்டாகிராமில் சாக்‌ஷி அகர்வால் ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோக்களை போட்டுத் தாக்கி வருகிறார். அவருக்கு சுமார் 2.1 மில்லியன் ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர். 1 மில்லியன் ஃபாலோயர்கள் இருந்தாலே அவர்களுக்கு ஏகப்பட்ட வருமானம் வருவதாக கூறுகின்றனர். மேலும், இதுபோன்ற இன்ஸ்டா பிரபலங்கள் பல விளம்பரங்களையும் செய்து காசு பார்த்து வருகின்றனர்.

ராஜா ராணி, காலா, விஸ்வாசம், டெடி, சிண்ட்ரெல்லா உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளார். நான் கடவுள் இல்லை, பஹீரா மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். அடிக்கடி கிடைக்கும் படங்களை சரியாக பயன்படுத்தி நடித்து வந்தாலும் பிக் பாஸ் பிரபலங்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைவதை போலவே இவருக்கும் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.

இந்நிலையில், நடிகையின் பெயரை பயன்படுத்தி சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக சாக்‌ஷி அகர்வால் எச்சரித்துள்ளார். நடிகை சாக்‌ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நண்பர்களே என்னுடைய பெயரில் சிலர் ஆல்டர்நேட் நம்பர் என சொல்லி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நம்பரில் இருந்து யாராவது அழைத்து என் பெயரை பயன்படுத்தினால் அதை கண்டு ஏமாந்து விடாதீர்கள். நெருங்கியவர்களுக்கு என் போன் நம்பர் தெரியும். அப்படி பிசினஸ் விஷயமாக போன் நம்பர் தெரியாமல் தொடர்புகொள்ள நினைப்பவர்கள் என்னுடைய இ மெயில் ஐடியை தொடர்பு கொள்ளுங்கள் என சாக்‌ஷி அகர்வால் போஸ்ட் போட்டுள்ளார்.

சமீபத்தில் அமலா சாஜி உள்ளிட்ட சில பிரபலங்கள் ஆன்லைன் மோசடியில் சிக்கினர். மேலும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் பெயரிலும் ராஜ்கமல் நிறுவனம் பெயரிலும் ஏகப்பட்ட மோசடிகளை விஷமிகள் செய்ததாக அலர்ட் விடுக்கப்பட்டது. தற்போது நடிகை சாக்‌ஷி அகர்வாலும் மோசடி குறித்து அலர்ட் செய்திருக்கிறார்.

Trending News

Latest News

You May Like