1. Home
  2. தமிழ்நாடு

இதை யாரும் நம்ப வேண்டாம்..! எங்கள் அம்மா வைஜயந்திமாலா நலமாக உள்ளார் - மகன் தகவல்..!

1

தமிழ், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் பிரபல மூத்த நடிகை வைஜெயந்திமாலா.

1950 -60  காலகட்டத்தில்  தென்னிந்தியாவில் இருந்து சென்று  ஹிந்தி மொழி படங்களில் நடிப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. வைஜெயந்தி அவர்கள் இந்திய சினிமாவில் வடக்கு தெற்கு என்ற போக்கை மாற்றியவர் என்று கூட சொல்லலாம். தமிழ் நாட்டில் இருந்து முதன் முதலில் ஹிந்தி திரைப்பட உலகிற்கு சென்று இந்திய திரைப்பட உலகை திரும்பி பார்க்க வைத்தவர் வைஜெயந்திமாலாதான்.

மது மதி, அமர் பாலி, நாகின், தேவ்தாஸ் உடப்பட பல்வேறு  ஹிந்தி  படங்களில் இன்றளவும் பாலிவுட்டில் பேசப்படும் படங்களாக உள்ளன. வைஜெயந்தி மாலா அவர்கள் தமிழில் மிக குறைவான எண்ணிக்கை படங்களில் தான் நடித்துள்ளார்.வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்பு திரை, சித்தூர் ராணி பத்மினி, தேன் நிலவு, மர்ம வீரன் போன்ற படங்கள் இவர் நடித்து குறிப்பிட்டு சொல்லும் தமிழ் படங்களாக இருக்கின்றன. வஞ்சி கோட்டை வாலிபன் படத்தில் இடம் பெறும்  வைஜெயந்தி அவர்களும் பத்மினி அவர்களும் இணைந்து  ஆடும்  கண்ணும் கண்ணும் கலந்து பாடல் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக மிக சிறந்த போட்டி நடன பாடலாக உள்ளது.

சென்னையில் பிறந்து வளர்ந்த அவர், சினிமா தாண்டி அரசியலிலும் ஜொலித்தார். மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் எம்.பி.யாக பணியாற்றினார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றவர் வைஜயந்திமாலா. வைஜெயந்தி மாலா கடந்த ஆண்டு அயோத்தியில் பரதநாட்டியம் ஆடியுள்ளார். 90 வயதாகும் நடனக் கலைஞரின் நடனத்தைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். அவரது பரதநாட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

திடீரென நேற்று வைஜயந்திமாலா காலமானார் என்ற செய்தி வெளியானது. இதை பார்த்த பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்  

இந்நிலையில், வைஜயந்திமாலாவின் மூத்த மகன் சுசீந்திர பாலி தனது 91 வயதான தாயார் நலமாக இருப்பதாகவும், அவர் காலமானதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like