மழை வெள்ளத்தில் உங்கள் வாகனம் மூழ்கி இருந்தால் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!
கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புக் காரணமாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்திய விமானப் படை, இந்திய கடற்படை, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உங்கள் வாகனம் தண்ணீரால் மூழ்கி இருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?
உங்கள் வாகனம் வெள்ளை நீரில் மூழ்கி இருந்தால் உங்கள் வாகனத்தில் உள்ளே தண்ணீர் சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. தண்ணீருடன் இருக்கும் இன்ஜினை ஸ்டார்ட் செய்தால் மொத்தமாக இன்ஜின் பழுதாகிவிடும் . இதனால் எக்காரணத்தைக் கொண்டும் வெள்ளநீர் வடிந்த பின்பு வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யாதீர்கள்.
நீங்கள் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயன்றால் வாகனத்தில் உள்ள இன்ஜின் உள்ளே இருக்கும் தண்ணீரை பெட்ரோல் என நினைத்து அதை இன்ஜின் முழுவதும் பரவ வழி செய்து விடும். இதனால் கொஞ்சமாக இருந்த தண்ணீர் இன்ஜின் முழுவதுமாக பரவி விடும்.
உங்களுக்கு வாகனத்தின் இன்ஜின் உள்ளே தண்ணீர் சென்றிருக்கலாம் என்ற லேசான சந்தேகம் இருந்தாலும் வாகனத்தின் பேட்டரியை முதலில் கழட்டுங்கள். பின்னர் முக்கியமாக ஸ்பார்க் பிளக்கை கழட்டி விடவும். நீண்ட நேரம் தண்ணீர் இருக்கும் இன்ஜினில் ஸ்பார்க் பிளக் இணைக்கப்பட்டு இருந்தால் ஸ்பார்க் பிளக் பகுதி துரு பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அது துருப்பிடித்து விட்டால் அதை சரி செய்வது என்பது கடினமான காரியம் ஆகிவிடும்.
உங்கள் வாகனம் தண்ணீரில் மூழ்கி விட்டால் வாகனத்தின் பல்வேறு பாகங்கள் செயலிழந்து போக வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்சினையை நீங்களே சரி செய்து விடலாம். என நினைக்காதீர்கள் இதற்கு அனுபவம் வாய்ந்த பல மெக்கானிக்கல் இருக்கிறார்கள். உங்கள் வாகனத்தை அவர்களிடம் கொண்டு சென்று பாதிப்பு எந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளது. என்பதை அறிந்து கொண்டு அதை எப்படி சுலபமாக சரி செய்யலாம் என செக் செய்து கொள்ளுங்கள்.
பருவமழை காரணமாக ஒரு நபரின் கார் தண்ணீரில் மூழ்கியிருந்தால், இன்சூரன்ஸ் க்ளைம் செய்வது ஒரு முக்கியமான பணி.
முதலும் முக்கியமான பணி, உங்கள் நீரில் மூழ்கிய காரை பதட்டப்பட்டு ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்ய வேண்டாம். காரின் இன்ஜினில் மழைநீர் சென்று இருந்தால் நீங்கள் வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது காரின் எஞ்சினை சேதப்படுத்தும் என்பதால் அவ்வாறு செய்வதைத் தவிர்க்கவும். அப்படி ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்து இன்ஜின் சேதம் அடைந்தால் காப்பீட்டுக் கொள்கையின் கீழ் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய முடியாது. அத்தகைய நேரத்தில் நீங்கள் செய்யக்கூடிய ஒன்று, நீரில் மூழ்கிய காரின் புகைப்படங்களைக் கிளிக் செய்வது.
தண்ணீரில் மூழ்கியிருக்கும் காரை புகைப்படம், காரில் சேதமடைந்த பகுதியை புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். புகைப்படம் எடுப்பது கட்டாயமில்லை என்றாலும், இந்த நேரத்தில் ஆதாரங்களைச் சேகரிப்பு பலனளிக்கும், ஏனெனில் அவை பின்னர் ஆதாரமாகக் காட்ட உதவும்.
கார் இன்சூரன்ஸ் கிளைம் அனுப்பும் போது புகைப்படங்களை இணைக்கலாம், நீங்கள் காப்பிட்டு நிறுவனத்திற்குத் தெரிவித்த பிறகு, கிளைம் டிக்கெட் எண்ணை மறக்காமல் பெறவும்.
காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரிவிப்பதில் தாமதம், காரை சர்வீஸ் சென்டருக்கு அனுப்பும் செயல்முறை தாமதம் ஆகியவை தண்ணீரில் மிதக்கும் உங்கள் காருக்கு பாதிப்பை அதிகரிக்கும். இதன் விளைவாகக் கார் அல்லது பைக் நீண்ட காலச் சேதம் ஏற்படுகிறது.