1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லையா? தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட்..!

1

ரேஷன் கார்டில் பெயர் இருப்பவர்கள் அனைவரும் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இதனை இன்னும் பல குடும்ப அட்டைதாரர்கள் செய்யாமல் உள்ளனர்.விரைவில் ரேஷன் கடைகள் வழியாக கைவிரல் ரேகை பதிவு செய்வதை நிறுத்த அரசு முடிவெடுத்திருக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருப்பதால் இதுவரை ரேஷன் கார்டில் பெயர் இருந்தும் கைவிரல் ரேகை பதிவு ரேஷன் கடையில் செய்யாதவர்கள் சீக்கிரம் உங்கள் கடைக்கு சென்று கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ளுங்கள்.சீக்கிரம் கைரேகை பதிவு செய்யாதவர்கள் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு அரசு இப்போது கொடுத்திருக்கும் முக்கிய அறிவிப்பில், கைவிரல்ரேகை சரிபார்ப்பு முறையில் 99% இன்றியமையாப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.உண்மையான, தகுதியான பயனாளிகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இன்றியமையாப் பொருட்கள் கைவிரல்ரேகை சரிபார்ப்பு முறையில் உறுதி செய்து விநியோகம் செய்யப்படுகிறது.கடந்த ஒன்பது மாதங்களில் பொது விநியோகத்திட்ட இன்றியமையாப் பொருட்கள் விநியோகம் சராசரியாக 99% கைவிரல்ரேகைப் பதிவு முறையில் நடைபெற்று வருகிறது எனவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

மேலும், தங்குத் தடையின்றி பொருட்களை பெற 2,620 புதிய நியாய விலைக் கடைகள் தமிழ்நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சிரமமுன்றி பெற்றுச் செல்லும் வகையில், மே-2021 முதல் 30.04.2025 வரையிலும், 843 முழு நேர நியாய விலைக் கடைகள் மற்றும் 1,777 பகுதி நேர நியாய விலைக் கடைகள் உட்பட, 2,620 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன விளக்கம் அளித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like