1. Home
  2. தமிழ்நாடு

கேரளாவுக்கு கல்வி சுற்றுலா போகாதீங்க - உயர்கல்வித்துறை சுற்றறிக்கை..!

1

நமது அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் நிபா வைரஸ் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து தமிழ்நாடு - கேரள எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தமிழ்நாடு சுகாதாரத்துறை கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை சார்பில், அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள், கேரளாவுக்கு கல்விச் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என உயர்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோவை மண்டலத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கல்விச் சுற்றுலாவாக கேரளாவுக்கு செல்வது வழக்கம். தற்போதும், பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் கேரளாவுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் தான் தமிழக உயர்கல்வித்துறை, நிபா வைரஸ் அச்சுறுத்தலைச் சுட்டிக்காட்டி இந்த சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

Trending News

Latest News

You May Like