1. Home
  2. தமிழ்நாடு

செப்டம்பர் 14ம் தேதிக்குள் ஆதாரில் மறக்காம இதை செஞ்சிடுங்க..!

1

இந்தியாவில் அரசுத்துறை சம்பந்தமான அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வங்கி சம்பந்தமான பணிகள், சிம் கார்டு வாங்குவது போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியம்.

ஆதார் கார்ட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கி வருகிறது. இதில் உள்ள அடிப்படை தகவல்களை ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒரு முறையும் புதுப்பிக்க வேண்டும் என இந்த ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் கார்டு வழங்கப்பட்ட தேதியில் இருந்து, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதில் உள்ள தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 14. இந்த காலக்கெடுக்குள் MyAadhaar போர்ட்டலில் ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். அடிப்படை விவரங்களை புதுப்பிக்க வேண்டும். செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு இலவசமாக ஆதாரை அப்டேட் செய்ய முடியாது. கட்டணம் செலுத்தியே புதுப்பிக்க முடியும்.

ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுப்பிக்கும் போது சேவைக்கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.
பாஸ்போர்ட், பான் கார்டு, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, தொழிலாளர் அட்டை, பள்ளி, கல்லூரி மதிப்பெண் சான்றிதழ், திருமண சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து ஆதாரை புதுப்பிக்க இயலும்.

myAadhaar என்ற போர்ட்டலுக்குச் சென்று Enter ஆப்சனை கிளிக் செய்த பின்னர் ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளீட வேண்டும். இதனையடுத்து 'Sent OTP' என்ற ஆப்சனை கிளிக் செய்து அது கிடைத்த பின்னர் உள்ளிட்டு Enter ஆப்சனை கிளிக் செய்யவும்.அதன்பின்னர் டாக்குமெண்ட் அப்டேட் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

இதனையடுத்து வழிமுறைகளை முழுதாக படித்த பின்னர் அடுத்த ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பிறகு, 'I confirm that the above details are correct' என்ற பாக்ஸை கிளிக் செய்யவும். அதன்பின்னர் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்பிக்க வேண்டும். இதனை தொடர்ந்து ஏழு நாட்களுக்குள் ஆதார் அட்டை இலவசமாக அப்டேட் இலவசமாக அப்டேட் செய்யப்படும்.

Trending News

Latest News

You May Like