இதை மறக்காம பண்ணிடுங்க.. டிசம்பர் 31 தான் கடைசி தேதி..!
இந்தியாவில் வருமானம் மற்றும் செலவினங்கள் தொடர்பான சேவைகளுக்கு முக்கிய தேவையாக இருக்கும் பான் ஆவணத்தை ஆதார் கார்டுடன் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. இதற்கு மார்ச் 31 ஆம் தேதி வரை முதலில் காலக்கெடு அளிக்கப்பட்டது இல்லை. இதனையடுத்து இந்த கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாகவே ஆதார் - பான் கார்டு இணைக்க வேண்டும் என கூறப்பட்டு வருகிறது.
இந்தியாவில் அனைத்து ஆவணங்களுடன் ஆதாரை லிங்க் பண்ணி வரும் நிலையில், பான் கார்டையும் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் ஆதார் மற்றும் பான் கார்டை வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் பான் கார்டு சம்பந்தமான சேவைகளில் சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் பான் கார்டு பயனபடுத்தும் அனைவரும் ஆதாருடன் இணைக்க வேண்டியது கட்டாயம் ஆகும். சமீபகாலமாக இந்தியாவில் பண மோசடிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. பான் கார்டு நம்பரை பயன்படுத்தியும் மோசடிகள் அரங்கேறுகிறது. இதையெல்லாம் தடுப்பதற்கு பான் கார்டுடன் ஆதார் இணைக்கப்படுகிறது. இதனால் போலி பான் கார்டு உபயோகம் தடுக்கப்படும்.
பான், ஆதார் இணைப்பை ஆன்லைனிலே எளிமையாக செய்து முடிக்கலாம். இதற்கு முதலில் வருமான வரித்துறையின் www.incometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதனையடுத்து முகப்பு பக்கத்தில் காட்டப்படும் "Quick Links" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து "Link Aadhaar" என்பதை கிளிக் செய்யவும். இதனையடுத்து தோன்றும் புதிய பக்கத்தில் பான் கார்டு, ஆதார் அட்டை நம்பர் மற்றும் பெயர் உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும்.
ஆதார் மற்றும் பானில் உள்ளதை போன்றே தகவல்களை நிரப்பி, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் செக் பாக்ஸை கிளிக் செய்ய வேண்டும். அத்ன்பின்னர் லிங்க் ஆதார் என்பதை கிளிக் செய்ய வேண்டும். தேவையான தகவல்களை வழங்கிய பின் அனைத்தும் சரி பார்க்கப்படும். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆதார், பான் கார்டு இணைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி விண்ணப்பத்தாரருக்கு அனுப்பி வைக்கப்படும்.
🚨 All PAN cards should be linked with Aadhar cards by December 31, 2024.
— Indian Tech & Infra (@IndianTechGuide) November 10, 2024
PAN cards will get deactivated if failed to do so: GOI. pic.twitter.com/6e3OeoUHN9