இதை மறக்காம செஞ்சிடுங்க..! கலைஞர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் பொங்கலுக்கு முன்...
மகளிர் உரிமைத் தொகை எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. தமிழ்நாடு அரசு இந்த திட்டத்துக்காக வகுத்திருக்கும் சில கண்டிஷன்கள் அடிப்படையிலேயே பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், நான்கு சக்கர மற்றும் கனரக வாகனம் இல்லாதவர்கள், 5 ஏக்கருக்கும் மிகாமல் நன்செய் நிலம் வைத்திருப்பவர்கள், 10 ஏக்கருக்கு மிகாமல் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற முடியும்
இதுதவிர ஜிஎஸ்டி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள், எம்எல்ஏ, எம்பி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவியில் இருப்பவர்களின் குடும்பங்களில் உள்ள பெண்கள் தமிழ்நாடு அரசின் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதி பெற முடியாது. ஓய்வூதியம் பெறுபவர்களும் இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருக்க முடியாது. இந்த வரைமுறைகள் இருந்தும் உங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்றால் நீங்கள் இந்த திட்டத்துக்கு தகுதியானவர்கள்.
எனவே அருகில் இருக்கும் இ-சேவை மையங்களுக்கு சென்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஒருவேளை விண்ணப்பித்து ஏதேனும் காரணங்களுக்காக நிராகரிப்பட்டிருந்தால் அவர்களும் உரிய ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அரசின் வழிமுறைகளின்படி தகுதிவாய்ந்த பெண்கள் பலரும் இன்னும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெற முடியாமல் உள்ளனர்.
அவர்களுக்கு எல்லாம் நிதியுதவித் தொகை வழங்கும் வகையில் விரைவில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது தகுதிவாய்ந்த பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். சிலர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளாக இருந்தாலும் அவர்களின் வங்கி கணக்குகளுக்கு பணம் செல்வதில்லை என்ற புகார் உள்ளது.
அப்படியானவர்கள் உடனடியாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தை மீண்டும் சரிபார்க்கவும். உங்கள் வங்கி கணக்கு எண் சரியாக கொடுக்கப்பட்டிருக்கிறதா என தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் பெயரில் வேறொருவர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பணம் வாங்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் வங்கி கணக்கு எண்ணை சரிபார்த்து தவறாக இருந்தால் அதனை சரி செய்து கொள்ளுங்கள். மொபைல் எண் சரியாக இருக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள்.
மிக முக்கியமாக இந்த இரண்டு எண்களும் தவறாக இருந்தால் உங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் இருக்கலாம். எனவே பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தவறான வங்கி கணக்கு எண் மற்றும் மொபைல் எண்ணை சரி செய்து கொண்டால் தை மாதம் முடிவதற்குள் உங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உங்கள் வங்கி கணக்குக்கு வர வாய்ப்பு இருக்கிறது.