இன்று மறந்தும் இந்த 5 விஷயங்களை செஞ்சுடாதீங்க..!

இன்று தவறிக் கூட சில தவறுகளை செய்து விடக் கூடாது. இந்த 5 செயல்களை செய்யாமல் தவிர்ப்பதால் எப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் நம்மால் வெளியே வர முடியும். கிரகங்களிலேயே மிக கடுமையான பாதிப்பை தரக் கூடியவர் சனி பகவான் தான் என்பதால் அனைவருக்கும் இவரிடம் பயம் உண்டு.
இந்து சமயத்தை பொறுத்தவரை சாமி சிலைகள் தெய்வீக ஆற்றலின் அடையாளமாக கருதப்படுகிறது. சனிப் பெயர்ச்சி அன்று சாமி சிலைகளை தொட்டு வணங்குவது மிகவும் அசுப செயலாக பார்க்கப்படுகிறது. அதனால் சாமி சிலைகளை சிவப்பு அல்லது மஞ்சள் நிற துணியால் மூடி வைக்க வேண்டும். கிரகணம் முடிந்த பிறகு புனிதமான கங்கை நீர் அல்லது வேறு ஏதாவது தீர்த்தம் கொண்டு சுத்தப்படுத்தி பூஜை செய்யலாம். அதற்கு பிறகு பூஜைகள் செய்தால் தான் பலன்கள் ஏற்படும்.
சூரிய கிரகணத்தன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுவதால், அமாவாசையும் இணைந்து வருவதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாருடனும் தேவையற்ற சண்டை, வாக்குவாதங்களை செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த நாளில் சண்டை வாக்குவாதங்கள் செய்வதால் பொருளாதார ரீதியான பிரச்சனைகள், ஆன்மிக மற்றும் உறவுகளில் பிரச்சனைகள் ஏற்படலாம். அமைதி காப்பதால் இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க உதவும்.
சூரிய கிரகணம் நிகழும் போது உணவு ஏதும் சாப்பிடக் கூடாது என்பார்கள். அதிலும் வெளி உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்படி சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள், சோம்பல், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். வெளி உணவு என்பது கர்ம வினைகளை பெரிதாக்கக் கூடியதாகும். ஒருவேளை கிரகண நேரத்தில் சாப்பிடுவது அவசியம் என்றால் வீட்டிலேயே சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும்.
இந்த நாளில் அடர் நிற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மீன ராசிக்காரர்கள் அடர்ந்த நிறங்கள் அல்லது கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது நல்லது. கருப்பு சனி பகவானுக்குரிய நிறமாகும். மீன ராசி, குரு பகவானின் ஆதிக்கம் பெற்ற ராசி. அதனால் எதிர்மறை ஆற்றல்களை கருப்பு நிறம் ஈர்த்து தக்க வைத்துக் கொள்ளுவதாக சொல்லப்படுகிறது. பொதுவாக சனியின் அருளை பெற கருப்பு ஆடைகளை அணிய வேண்டும் என்பார்கள். ஆனால் சனிப் பெயர்ச்சி அன்று கருப்பு ஆடைகளை அணிந்தால் அது சனியின் செல்வாக்கை தீவிரப்படுத்தும். அதோடு மன அழுத்தம், தாமதங்கள், சுமைகளள் ஆகியவற்றை அதிகரிக்கும். அதற்கு பதிலாக வெள்ளை, மஞ்சள் அல்லது மென்மையான நிறங்களை அணிவது சிறப்பு.
சனியின் பெயர்ச்சி என்பது தாமதங்கள், தடைகள், எதிர்பாராத சிரமங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது. அதனால் இந்த நாளில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் தீய விளைவுகளை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக மீன ராசிக்காரர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் மந்திர ஜபம் செய்து வீட்டில் இருந்த படியே இறை வழிபாட்டில் ஈடுபடலாம்.