1. Home
  2. தமிழ்நாடு

பிரியாணி சாப்பிடாதீர்கள் சைவமாக மாறுங்கள் - மதுரை ஆதீனம்..!

1

இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 7-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திண்டுக்கல்லில் 14 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து அந்த சிலைகள் அனைத்தும் சரக்கு வேன்கள் மூலம் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கொண்டுவரப்பட்டன. அப்போது அங்கு விநாயகர் சதுர்த்தி விழா கூட்டம் நடந்தது. இதில், மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் மக்களே யாரும் மது குடிக்காதீர்கள். சிகரெட் பிடிக்காதீர்கள், பிரியாணி சாப்பிடாதீர்கள், சைவமாக மாறுங்கள். தி.மு.க. அரசு வள்ளலார் விழாவையும், பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டையும் நடத்தியது சிறப்புக்குரியது. சேகர்பாபு காவி வேட்டி கட்டியதே நமக்கு வெற்றிதான். முருகன் மாநாட்டின்போது, அவரிடம் நான் இரண்டு கோரிக்கைகளை வைத்திருக்கிறேன். தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் கச்சத்தீவை தாரை வார்த்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திதான் காரணம். கச்சத்தீவை மீட்டால்தான் மீனவர்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like