வீணாய் போன பழனிசாமி பற்றி பேசி கவனத்தை திசை திருப்ப வேண்டாம் - டிடிவி..!

அடையாறில் அமுமுகவின் புதிய தலைமை அலுவலக திறந்து வைத்தார் வைத்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது
பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு இரு மொழிக் கொள்கையை அமல்படுத்தினார். தாய் மொழியான தமிழும், இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புதியக் கல்விக் கொள்கை மூலம் மூன்றாவது மொழியை படிக்க வேண்டும் என மத்திய அரசு சட்டம் நிறைவேற்ற உள்ளது. தமிழ்நாடு அரசு வேண்டாம் என்றால் இருமொழிக் கொள்கையே போதும் என்று சொல்லி அரசியல் ஆக்காமல் இருக்க வேண்டும். எனக்கு தெரிந்து பெரும்பாலான தமிழக மக்கள் இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாகவே உள்ளார்கள். பெரும்பாலான அரசியல் இயக்களும் ஆதரவாகவே இருக்கிறோம். ஆனால் அதைவிட்டுவிட்டு எனக்கு 10 ஆயிரம் கோடி வேண்டாம் என்று சிவாஜி கணேசனை போல் வசனம் பேசுகிறார்கள்.
இந்த ஆட்சியாளர்கள் மீது உள்ள மக்கள் கோபத்தை மடைமாற்றும் விதமாக திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இந்தியை திணிப்பதாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் இருமொழிக் கொள்கையைதான் பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள்.அரசுப்பள்ளிகளில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும் என்பதுதான் எல்லோரின் விருப்பமும். மத்திய அரசின் நிதி வேண்டாம் என முதலமைச்சர் முடிவு செய்த பிறகு அரசு பள்ளிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை. போதை பொருள் நடமாட்டமும்,பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகமாகி உள்ளது. கூலி படைகளால் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை.
அப்பாவுக்கு நினைவகம் திறக்கவும், கருணாநிதிக்கு சிலை திறக்கவும் மத்தியில் இருந்து அமைச்சர்கள் தேவைப்படுகிறார்கள். இது ஒரு பெரிய பிரச்னையாக உள்ள போது பிரதமரை சந்தித்து அழுத்தம் தருவதை விட்டுவிட்டு சத்தம் போடுவதால் எந்த பலனும் இல்லை. தமிழ்நாட்டில் கட்டப்படும் பாலங்கள் மூன்று மாதங்களில் இடிந்து விழும் அளவுக்கு ஊழல் நிறைந்து உள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவது போல்தான் தமிழ்நாட்டுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் 90 சதவீதம் நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர். எல்லா மாவட்டங்களுக்கும் எப்படி ஒரு மாநில அரசு நிதியை பங்கிட்டுதருகிறார்களோ அப்படிதான் மத்திய அரசும் மாநிலங்களுக்கு நிதிகளை பகிர்ந்து அளிக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம். அடுத்து வரும் 2026 தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும்.
சாதிவாரி கணக்கெடுப்பு தேவை, அதன் மூலம்தான் உரிய பங்கீடு சமூகங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. திரும்பத் திரும்ப வீணாய் போன பழனிசாமி பற்றி கேள்வி கேட்டுவிட்டு, இந்த ஆட்சியில் நடக்கும் தவறுகள் பற்றி கேள்வி கேட்காமல் திசை திருப்புகின்றீர்கள். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் உறுதியாக ஓரணியில் திரண்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயாக கூட்டணி ஆதரவுடன் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தன்னை காப்பாற்றிக் கொள்ளவே தனியாக வேட்பாளரைநிறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி இனி பலப்படும், திமுக கூட்டணிக்கு மாற்று சக்தியாக இது இருக்கும்.