ரயில் என்ஜின் மீது ஏறி செல்பி எடுக்கக் கூடாது : ரயில்வே எஸ்.பி. எச்சரிக்கை..!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் 66-வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்து 526 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அஞ்சலி செலுத்த வந்த இளைஞர் பரமக்குடி ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் மீது ஏற முற்பட்டபோது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பரமக்குடி ரயில் நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட எஸ்.பி.செந்தில்குமார் போலீசருக்கு கட்டுப்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் பரமக்குடி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ரயில் என்ஜின் மீது ஏறவோ, செல்பி எடுக்கவோ கூடாது என ரயில்வே எஸ்.பி. செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.