விதியை மீறாதீங்க இந்தியர்களே! சம்பாதித்த பணமெல்லாம் போயிடும்..
யு.ஏ.இ.,யில்., ஏறக்குறைய 35 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். பணி நிமித்தமாக ஆண்டுக்கு பல லட்சம் பேர் வந்து செல்கின்றனர். போலியான விசா மூலம் யு.ஏ.இ., வருபவர்கள் மற்றும் காலக்கெடு முடிந்த விசா உடன் பல வெளிநாட்டவர்கள் யு.ஏ.இ.,யில் இருப்பதால் இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு இது தொடர்பான சட்டத்தை கடுமையாக்கி இருக்கிறது.
கடந்த காலத்தில் இந்திய மதிப்பில் ரூ. 11 லட்சம் முதல் ரூ. 45 லட்சம் வரை அபராதம் இருந்து வந்தது. தற்போது அந்நாட்டு அரசு இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்திருப்பதால் அபராதம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அதாவது குறைந்தது ரூ 22.8 லட்சம் முதல் 2 கோடியே 28 லட்சம் வரை ( ஒரு லட்சம் திர்காம்ஸ் முதல் 10 லட்சம் திர்காம்ஸ்) அபராதம் செலுத்த நேரிடும். இந்தியர்களே உஷார் !