1. Home
  2. தமிழ்நாடு

சாலையில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம் - சென்னை காவல்துறை..!

Q

சாலையில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஆயுத பூஜையில் திருஷ்டி கழிக்க பூசணிக்காய்களை உடைக்கும் பழக்கம் உள்ளது.
சாலையில் உடைப்பது வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தானது.
சாலை பாதுகாப்புக்காக, சாலையில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம்.
அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like