1. Home
  2. தமிழ்நாடு

கிப்ட் பார்சல் அனுப்புவதாக கூறினால் நம்பாதீர்கள்..!

Q

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் மற்றும் பண மோசடி கும்பலிடம் இருந்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் பொதுமக்களுக்கு சைபர் குற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போஸ்டர் வெளியிட்டுள்ளது.

சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளது

1.பேஸ்புக்,வாட்ஸ் அப்,இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கிப்ட் பார்சல் அனுப்புவதாக கூறினால் நம்பாதீர்கள் பணம் கட்டாதீர்கள்

எஸ்எம்எஸ் whatsapp telegram மூலம் பெறப்படும் செயலிகளின் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்

3.அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து whatsapp மூலம் வரும் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்வதை தவிர்க்கவும்

பகுதி நேர வேலை youtube லைக்ஸ் ரேட்டிங்ஸ் டெலகராமில் பிரிபைட் டாஸ்க் என பணம் கட்ட சொன்னால் பணம் கட்டாதீர்கள்

4.ஆன்லைன் லோன் ஆப் மூலம் கடன் வாங்கி ஏமாறாதீர்கள்

5.மின்சார கட்டணம் கட்டவில்லை KYC update ஆதார் இணைப்பு என்று போலியாக வரும் குறுஞ்செய்திகளில் உள்ள லின்குகளை கிளிக் செய்யாதீர்கள்

6.உங்கள் ஏடிஎம் கிரெடிட் கார்டு CVV PIN OTP மற்றும் MPIN விவரங்கள் எக்காரணம் கொண்டும் எவருக்கும் சொல்ல வேண்டாம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பொதுமக்கள் கவனத்திற்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது

 

மேலும் இது குறித்து சைபர் குற்ற உதவி எண் 1930 தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும் பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Trending News

Latest News

You May Like