1. Home
  2. தமிழ்நாடு

உங்கள் இப்படி ஒரு போன் வந்தால் நம்பாதீங்க! தப்பிப்பது எப்படி?

1

சைபர் மோசடி என்பது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ரூபத்தில் இருக்கும். இப்போது டிஜிட்டல் அரஸ்ட் எனப்படும் சைபர் மோசடி தான் பரவி வருகிறது. இதை வைத்து மோசடி பேர்வழிகள் பல கோடி ரூபாய் பணத்தைத் திருடுகிறார்கள். அதென்ன டிஜிட்டல் அரஸ்ட் மோசடி என்றால் என்ன.. இதை வைத்து எப்படி மோசடி செய்கிறார்கள்.. இதில் இருந்து நாம் எப்படித் தப்ப வேண்டும் ..?

உங்களுக்கு திடீரென ஒரு ஃபோன் கால் வருகிறது.. சாதாரண லேண்ட் லைன் நம்பரில் இருந்து அந்த கால் வருவது போல இருக்கும். அதை எடுத்துப் பேசினால்.. நீங்கள் அனுப்பிய பார்சல் சில காரணங்களால் மும்பை சுங்கத் துறை அலுவலகத்தில் சில காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்துக் கூடுதல் தகவல்களைப் பெற 9ஐ அழுத்துங்கள் எனச் சொல்வார்கள். எதாவது நிறுவனத்திடம் இருந்து நமக்கு சர்வீஸ் கால் வந்தால் எப்படி இருக்குமா.. அச்சு அசலாக அதுபோலவே இது இருக்கும்.

நான் எதுவும் பார்சல் அனுப்பவில்லையே எனக் கேட்டால்.. இல்லை உங்கள் பெயரில் தான் அனுப்பி இருக்கிறார்கள்.. உங்கள் ஆதார் பெயர், மொபைல் நம்பர் எல்லாம் இருக்கிறது எனச் சொல்வார்கள். அப்படியே நம்மிடமே மெல்லக் கேட்டு எல்லா தகவல்களையும் வாங்கிவிடுவார்கள். பிறகு கொஞ்ச நேரம், ஆதார் கார்டை எப்படிப் பாதுகாப்பாக யூஸ் செய்ய வேண்டும் அட்வைஸ் செய்வது போலப் பேசுவார்கள். அப்போது திடீரென அவர்கள் டோன் மாறும்.

அதாவது ஹெட் ஆபீசில் இருந்து ஆர்டர் வந்ததாகவும் மோசடியில் ஈடுபட்டதற்காக உங்களைக் கைது செய்ய வேண்டும் என்பார்கள். இடையில் வீடியோ காலிலும் வந்து போலீஸ் யூனிபார்மில் கூட ஒருவர் பேசுவார். தொடர்ந்து உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அனைத்து தொகையையும் மாற்ற வேண்டும் என்றும் உங்களுக்கு இந்த மோசடியில் தொடர்பு இல்லை என தெரிந்தால் அந்த தொகையைத் திரும்பத் தருவோம் என மிரட்டும் தொனியில் பேசி வாங்கிவிடுவார்கள். இதன் பெயர் தான் டிஜிட்டல் அரஸ்ட்.

 

சரி, இந்த மோசடியில் எப்படி ஏமாறாமல் இருக்க வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம். இப்படி பார்சல் மட்டுமின்றி, உங்கள் மொபைலை தவறாகப் பயன்படுத்துவதால் பிளாக் செய்கிறோம், உங்கள் வங்கிக் கணக்கில் மோசடிக்காரர் பணம் போட்டுள்ளார் எனப் பல விதங்களில் பொய் சொல்வார்கள் கவனம். முதலில் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.. எந்தவொரு அரசு அதிகாரியும் உங்களை போனில் தொடர்பு கொண்டு தகவல்களைக் கேட்க முடியுமே தவிர டிஜிட்டல் அரஸ்ட் செய்ய முடியாது. அதற்குச் சட்டத்திலேயே இடமில்லை. மேலும், ஒருவரைக் கைது செய்ய அல்லது விசாரணைக்கு அழைக்க நீதிமன்ற உத்தரவு அல்லது போலீஸ் சம்மன் தேவை. அதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

எனவே, இதுபோன்ற மோசடி கால் வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது ஒரே விஷயம் தான்.. ஆதார், வங்கிக் கணக்கு என எந்தவொரு தகவலையும் பகிராதீர்கள். வீடியோ காலுக்கு நிச்சயம் நோ சொல்லுங்கள்.. எதிர்த் தரப்பில் என்ன சொல்லி மிரட்டினாலும், போலீஸ் ஸ்டேஷன் வாங்க அங்கு பேசிக்கலாம் என சொல்லுங்கள்.. அதையும் தாண்டி மிரட்டினால் கட் செய்துவிட்டு நேரடியாக போலீஸ் நிலையத்திற்குச் செல்லுங்கள்..

Trending News

Latest News

You May Like