1. Home
  2. தமிழ்நாடு

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்..! துரை தயாநிதி நலமுடன் இருப்பதாக வேலூர் சிஎம்சி மருத்துவமனை விளக்கம்..!

1

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. திமுகவில் இருந்த போது தென் மண்டல அமைப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மதுரையில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.

இவரது மகன் துரை தயாநிதி. சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்துவந்த தயாநிதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரது வீட்டிலிருந்தவர்கள் அவரை மீட்டு, அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதை உறுதிசெய்ததோடு, உடனடியாக சிகிச்சையைத் தொடங்கியிருக்கின்றனர். சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேல் சிகிச்சை நடைபெற்றதையடுத்து, அவரை பொது வார்டுக்கு மாற்றினர்.

 சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை நேரில் சென்று இருமுறை முதல்வர் முக ஸ்டாலின் பார்த்து விட்டு நலம் விசாரித்துவிட்டு வந்தார்.

இதனிடையே துரை தயாநிதி உடல் நலம் குறித்து தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், "துரை தயாநிதி ஆரோக்யமாக உள்ளார். அவரது உடல் நிலை குறித்து பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது. இதுபோன்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம்.. பரப்பவும் வேண்டாம்" என்று தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like