1. Home
  2. தமிழ்நாடு

அமலாக்கத்துறை இயக்குனரின் பதவி நீட்டிப்பு செல்லாது தீர்ப்பிற்கு மகிழ்ச்சியடைய வேண்டாம் - அமித்ஷா ட்வீட்..!

1

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு மூன்று முறை அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த மே மாதம் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பினை ஒத்திவைத்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வு, சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு ஆணை, உச்ச நீதிமன்ற டிவிசன் பெஞ்சின் 2021 ஆண்டு தீர்ப்புக்கு முரணானது. அதில், மிஸ்ராவின் பதவியை நவம்பர் 2021-க்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் சட்டத்தினை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்றாலும், கடந்த 2021-ஆம் ஆண்டு மிஸ்ரா பதவியில் நீடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சிறப்பு ஆணையிட்டிருக்கிறது என்று தெரிவித்தது. மேலும், வரும் ஜூலை 31-ம் தேதி வரை சஞ்சய் மிஸ்ரா பதவியில் இருக்கலாம் என்றும், அதற்கு அமலாக்கத் துறைக்கு புதிய இயக்குநரை நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமலாக்கத்துறை மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சியடைய வேண்டாம் என்று கூறினார்.

சிவிசி சட்டத்தில் திருத்தம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்பட்டது என்றார். அதை நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஊழல் செய்பவர்கள் மற்றும் சட்டத்தின் தவறான பக்கத்தில் செயல்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் அப்படியே இருக்கும்.

அமலாக்கத்துறை என்பது அனைவருக்கும் மேலானது ஆகும். பணமோசடி குற்றங்கள் மற்றும் அந்நியச் செலாவணி சட்டங்களை மீறுதல் ஆகியவற்றை விசாரிப்பதற்கான அதன் நோக்கத்தை அது தொடர்ந்து தொடரும். அமலாக்கத்துறை இயக்குனர் யார் என்பது முக்கியமில்லை, ஏனெனில் இந்த பாத்திரத்தில் இருப்பவர்கள் வளர்ச்சிக்கு எதிரான மனநிலை கொண்ட ஊழல்வாதிகளை தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்று அமித் ஷா கூறினார்.


 

Trending News

Latest News

You May Like