1. Home
  2. தமிழ்நாடு

என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள் - நடிகர் ரஜினிகாந்த்..!

1

சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்திடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் எனப் பரவும் செய்தியை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள் என்று உங்களிடம் சொல்லி இருக்கிறேன்” எனப் பதில் கூறினார்.

அதனைத் தொடர்ந்து வேட்டையன் படம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் யார் யார் கலந்து கொள்வார்கள் எனக் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்குத் தெரியாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இதனைத் தொடர்ந்து வேட்டையன், கூலி படங்கள் எவ்வாறு வந்துள்ளது என்று கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அனைத்தும் நன்றாக வந்துள்ளது என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like