முருகன் கோயிலுக்கு ரூ.206 கோடி நன்கொடை..!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டதில்லுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்திருகோயில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வரும் நிலையில் இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.
இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7ஆம் தேதியான நாளை குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. 2009க்கு பின்பு 15 வருடங்களுக்கு பின்னர் நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்காக திருச்செந்தூர் கோயிலானது புது பொலிவுடன் விழா கோலம் பூண்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய சமய அறநிலைத்துறை 2022 ஆம் ஆண்டு கோயில் புனரமைப்புக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்தது. அதில் 206 கோடி ரூபாய் சிவ் நாடார் அவரின் தாயார் பெயரில் வாமா சுந்தரி அறக்கட்டளை மூலம் பணம் கொடுத்துள்ளார். அதில், ராஜகோபுரம், அர்த்தமண்டபம், அன்னதான கூடம், முகப்பு மண்டபம், பாதசாரி நடை மாறாமல் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவில் 60 சதவீதம் சிவ் நாடார் கொடுத்துள்ளார்.
சிவ் நாடார் வெறும் பணக்காரர் மட்டுமல்ல, ஒரு சிறந்த கொடையாளியும் ஆவார். கல்வி மற்றும் சமூக மேம்பாட்டில் ஆழ்ந்த அக்கறை கொண்ட இவர் இந்தியாவின் கல்விப் புரட்சிக்கு பெரும் பங்களிப்பைச் செய்து வருகிறார். குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு கல்வி நிறுவனங்களையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.
தனது தாயின் அறிவுரையின்படி, தான் ஈட்டிய செல்வத்தை சமூகத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் நன்கொடை பணிகளைத் தொடங்கிய சிவ் நாடார், வெறும் நிதியுதவி அளிப்பதோடு நின்றுவிடாமல், நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறார். அவரது தொலைநோக்குப் பார்வை, எதிர்கால சந்ததியினருக்கும் நன்மையை பயக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட திட்டங்களுக்கு அடிப்படையாக அமைகிறது.