1. Home
  2. தமிழ்நாடு

டொனால்ட் ட்ரம்ப் விடுதலை... தண்டனை இல்லை, அபராதம் இல்லை..!

1

டொனால்ட் ட்ரம்ப் வரும் 20ஆம் தேதி அந்நாட்டின் 47வது அதிபராக பதவியேற்க உள்ளார்.இதற்கிடையில் நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் தொடர்பான வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டப்பட்டது. இண்ட வழக்கின் பின்னணியை பார்க்கும் போது, கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கு முன்பாக ட்ரம்ப் தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாக அமெரிக்காவை சேர்ந்த நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் குற்றம்சாட்டினார்.

இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருக்க 11 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாகவும் கூறி பகீர் கிளப்பினார். இதை மறைக்க தனது நிறுவன கணக்குகளில் முறைகேடு செய்ததாகவும் கூறப்பட்டது. இத்தகைய குற்றச்சாட்டுகளை அடுத்து ட்ரம்ப் மீது 34 பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனை நியூயார்க்கில் உள்ள மேன்ஹாட்டன் நீதிமன்றம் விசாரித்து வந்தது.

கடந்த ஆண்டு மே மாதம் ட்ரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்தது. நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும், இது அதிபராக பதவியேற்க சிக்கலை ஏற்படுத்தும் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில் மேன்ஹாட்டன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதாவது, டொனால்ட் ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அபராதமும் விதிக்கப்படவில்லை. குற்றம் உறுதி செய்யப்பட்ட பின்னர் தண்டனை வழங்கப்படாத விஷயம் மிகவும் வினோதமாக அமைந்துள்ளது. இதில் மற்றொரு விஷயமும் அரங்கேறியிருக்கிறது.

தனக்கு வழங்கப்படவுள்ள தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் ட்ரம்ப் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது. இதன்மூலம் வரும் 20ஆம் தேதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்பதில் எந்தவித சிக்கலும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

Trending News

Latest News

You May Like