டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கு டொனால்ட் டிரம்ப் மீண்டும் அழைப்பு..!
அமெரிக்காவில் எலான் மாஸ்க் போன்ற தொழிலதிபர்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்தி, செழித்தோங்க வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:
எலான் மஸ்க் நிறுவனங்களுக்கு அளித்து வந்த மானியத்தை நான் நிறுத்தி அவரது தொழிலை முடக்கி விடுவேன் என்று பலரும் பேசுகின்றனர். அது உண்மை இல்லை. எலான் மஸ்க் போன்ற தொழிலதிபர்கள் அமெரிக்காவில் இருந்து தொழில் செய்ய வேண்டும். அவர்களது தொழில் நிறுவனங்கள் அமெரிக்காவில் செழித்து வளர வேண்டும்.
முன் எப்போதும் இல்லாத வகையில், அவர்களது தொழில் விருத்தி அடைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதரமும் வளர்ச்சியடையும். நீங்கள் தொழிலில் சிறந்து விளங்கினால், அமெரிக்காவும் சிறந்து விளங்கும். இது நம் அனைவருக்கும் பலன் அளிக்கும். ஒவ்வொரு நாளும் புது புது சாதனைகளை நாம் நிகழ்த்தி வருகிறோம். இந்த சாதனை தொடர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.