1. Home
  2. தமிழ்நாடு

நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயர் பரிந்துரை..!

Q

உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக டிரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். அவர், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்து உள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது டிரம்பிற்கு ஒரு நியமனக் கடிதத்தை வழங்கினார்.
'நோபல் பரிசுக் குழுவிற்கு நான் அனுப்பிய கடிதத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அமைதிப் பரிசுக்கு உங்களை பரிந்துரைப்பது மிகவும் தகுதியானது. அதிபர் டிரம்ப் அதைப் பெற வேண்டும்' என்று நெதன்யாகு கூறினார். குறிப்பாக மத்திய கிழக்கில், நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில் டிரம்பின் தலைமையை இஸ்ரேல் பிரதமர் பாராட்டி உள்ளார்.

Trending News

Latest News

You May Like