அரசு ஊழியர்களுக்கு 8 மாத ஊதியத்துடன் விஆர்எஸ் திட்டத்தை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்..!

அமெரிக்க அதிபராக கடந்த 20 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்ட டிரம்ப், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், அரசு ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
ஃபெடரல் அரசு ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
செவ்வாயன்று (ஜனவரி 28) மில்லியன் கணக்கான ஃபெடரல் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், ஊழியர்களுக்கு விஆர்எஸ் ராஜினாமா திட்டத்தை ஏற்க பிப்ரவரி 6 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சிபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 10% ஃபெடரல் பணியாளர்கள் அதாவது சுமார் 200,000 ஊழியர்கள் இந்த விஆர்எஸ் திட்டத்தைத் தேர்வு செய்யலாம் என்று டிரம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
இது அரசாங்கத்திற்கு $100 பில்லியன் வரை சேமிப்பைக் கொடுக்கும். அதேநேரத்தில் விஆர்எஸ் திட்டத்தை தேர்வு செய்பவர்களுக்கு 8 மாத ஊதியம் வழங்கப்படும்.