இன்று இந்த விரதத்தை செய்வதால் எப்போதும் வீட்டில் செல்வ வளம் நிறைந்திருக்கும்..!
வரலட்சுமி விரதம் என்றால் லட்சுமி தேவியை வழிபடுவது.இந்த விரதத்தை செய்வதால் எப்போதும் வீட்டில் செல்வ வளம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்,
இந்நாளில் வீட்டின் மூத்த பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை செய்வதற்கு முன் கலசத்தை தயார் செய்யவும். கலசத்தை ஒரு பூக்களால் அலங்கரிக்கவும். பின்னர் குங்குமம் மற்றும் மஞ்சள் சந்தனம் கலந்து ஸ்வஸ்திகா சின்னத்தை வரையவும்.
முக்கியமாக கலச பாத்திரத்தில் அரிசி அல்லது தண்ணீர், நாணயங்கள், ஐந்து வகையான இலைகள் மற்றும் வெற்றிலைகள் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். இறுதியாக மா இலைகளை கலசத்தின் மீது வைக்க வேண்டும். பிறகு மஞ்சளை தேங்காயில் முழுவதுமாக தடவி வைக்கவும். இந்த நேரத்தில் கலசத்தை சில ஆபரணங்களால் அலங்கரிக்க வேண்டும். அதன் பிறகு பூஜை செய்யப்பட்டு பல்வேறு வகையான பழங்கள் மற்றும் இனிப்புகள் வழங்க வேண்டும். அன்று மாலை அம்மனுக்கு ஆரத்தியும் சமர்பிக்கப்படுகிறது.
இப்போது வர மஹாலக்ஷ்மியை வணங்கும் போது ஓம் ஹ்ரீம் ஸ்ரீ லக்ஷ்மிபயோ நமஹ் என்ற இந்த மந்திரத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். இது உங்கள் ஆசைகளை நிறைவேற்றும். இது உங்கள் கணவரின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
வரலட்சுமி விரதம் இருப்பதால் நல்ல ஆரோக்கியம், ஐஸ்வர்யம், செல்வ வளம் ஆகியவை கிடைக்கும். தீமைகள் அனைத்தும் நீங்கி குடும்பம் செழிக்கும். தொழில் முடக்கம், பணப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். மன அமைதி கிடைப்பதுடன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வரலட்சுமி விரதம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த நாளில் மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, பூஜைகள் செய்து, எப்போதும் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும்.