1. Home
  2. தமிழ்நாடு

மீம்ஸ் மூலம் உலகம் முழுவதும் மக்களை கவர்ந்த நாய் உடல்நலக்குறைவால் மரணம்..!

1

மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக மீம்கள் சமீப ஆண்டுகளில் பெரும்பான்மையான மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.அந்த வகையில் சமீப காலங்களில் பலரையும் ஈர்த்தது சீம்ஸ் எனும் நாய். இதன் புகைப்படத்துடன் கூடிய மீம்கள் வெடிசிரிப்பை வரவழைக்கக்கூடியவை. ஜப்பானை சேர்ந்த அஸ்துக்கோ சாடோ என்பவர் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த பெண் நாயை வளர்க்க துவங்கியிருக்கிறார். அதற்கு கபோசு எனவும் அவர் பெயரிட்டிருக்கிறார்.

2010 ஆம் ஆண்டு இதன் உரிமையாளர் கபோசுவை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தினார். அப்போது இதனுடைய மிக அழகான போஸ்கள் சமூக ஊடகங்களில் வைரலாக தொடங்கியது. அந்த சமயத்தில் இந்த நாயின் வயது வெறும் 5 தான். இந்த நிகழ்விற்கு பிறகே கபோசுவின் படத்தை எல்லா மீம்களிலும் நெட்டிசன்கள் பயன்படுத்த தொடங்கினர். அதுமுதல் இணையதளங்களை இந்த நாய் ஆக்கிரமித்தது. தமிழக சூழலிலும் சீம்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் இந்த நாயை கொண்டு பல மீம்களை நெட்டிசன்கள் உருவாக்கி வந்தனர்.

இளைஞர்கள் இந்த வகை மீமஸ்களை பகிர்வது மட்டுமின்றி, Doge மீம்ஸ் கதாபாத்திரங்களை தங்களுடன் ஒப்பிட்டுக்கொண்டு புதிது புதிதாக எண்ணிலடங்கா மீம்ஸ்களை இணையத்தில் அள்ளி வீசியுள்ளனர்.  

அந்த வகையில், அந்த Doge மீம்ஸில் முக்கிய கதாபாத்திரமாக விளங்கும் சீம்ஸ் நாய் சமீபத்தில்  நோய்வாய்ப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் சீம்ஸ் விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கை இணையம் முழுவதும் இருந்தது. இந்நிலையில், சீம்ஸ் நாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டாக அதன் உரிமையாளர் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

Trending News

Latest News

You May Like