1. Home
  2. தமிழ்நாடு

இதுக்கு இது தான் அர்த்தமா? இத்தனை நாள் தெரியாம போச்சே!!

இதுக்கு இது தான் அர்த்தமா? இத்தனை நாள் தெரியாம போச்சே!!

தினசரி நாம் செய்யும் செயல்கள் பலவற்றிற்கு அர்த்தம் தெரியாமலேயே நாம் செய்துக் கொண்டிருக்கிறோம். பிறந்த அனைவரின் வாழ்விலும் உரிய பருவம் வந்ததும்,திருமணம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் நிறைய திருமணங்களுக்கு சென்றிருப்போம். ஏன் .... நம் வாழ்விலும் அத்தகைய அற்புதமான தருணம் கடந்திருக்கலாம். திருமணத்தின் போது நிகழும் முக்கியமான சடங்கான திருமாங்கல்யம் கட்டும் தருணத்தின் போது சொல்லப்படும் மந்திரத்தின் பொருள் எத்தனை பேருக்கு தெரியும்.

புரோகிதருக்கு தெரியுமே என்று சொல்லக் கூடாது. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. வெறும் கடமைக்காக அந்த சடங்கை செய்வதை விட இனியாவது அதன் அர்த்தம் தெரிந்துக் கொண்டு,நமக்கு தெரிந்தவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது அதன் ஆத்ம சந்தோஷமே தனி தானே .

அதன் பொருள் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா ....

மாங்கல்யம் தந்துனானேன

மமஜீவன ஹேதுநா

கண்டே பத்நாமி ஸுபகே

த்வம ஜீவ சரதஸ்சதம்

பொருள்

மங்கலத்தின் மறு பெயர் கொண்ட அழகான மணப்பெண்ணே, இந்த நொடியிலிருந்து, உன்னோடு துவங்கும் இல்லற வாழ்வு நமக்கு மிக நல்ல முறையில் அமைய வேண்டும், நம் வாழ்வும்,வளமும்நன்றாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் மனதார வேண்டிக்கொண்டு இந்த புனிதமான திருமாங்கல்யச் கயிற்றை உனக்கு அணிவிக்கிறேன்.

இந்த உலகே போற்றும் நல்ல மனைவியாக, அனைத்து இன்ப, துன்பங்களிலும், சுக துக்கத்திலும் சரிசமமாக பங்கேற்று, நூறு ஆண்டு காலம் மங்கலமாக வாழ்வோம்.

வாழ்வின் முக்கியத் தருணமான திருமண மந்திரத்தின் பொருள் உணர்ந்து அறியும் போது,வாழ்க்கையின் அர்த்தம் முழுமை அடைகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like